பேரீச்சம்பழம் சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும் என்கிறார் நபிகள் நாயகம். இதை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? காலை உணவாக பேரீச்சம ்பழங்கள் சிலவற்றை சாப்பிட வேண்டும். அவரை சூன்யமோ, விஷக்கடியோ நெருங்காது.
இதை "அஜ்வா' என அழைப்பர். "அஜ்வா' என்றால் "விஷத்தை முறிக்கக் கூடியது' எனப் பொருள். புதிய பழங்களுடன் காய்ந்த பழங்களையும் சேர்த்து உண்ண வேண்டும். இவ்வாறு செய்தால் ஷைத்தான் நம்மை நெருங்க மாட்டான். இதை சாப்பிடுவோருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். நம்மைப் பெற்ற தந்தை எப்படி பாதுகாக்கிறாரோ, அதே கவனத்துடன் பேரீச்சம்பழமும் பாதுகாக்கிறது.
அதனால் தான் இப்பழத்தை "உங்களின் சிறிய தந்தை' என வர்ணித்தார் நபிகள் நாயகம். அவர் மேலும் கூறும் போது, ""நம் தந்தை ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் எந்த மண்ணிலிருந்து படைத்தானோ, அதில் மிஞ்சிய மண்ணால் பேரீச்சம்பழத்தை படைத்தான்,'' என்றார். ஆதம் (அலை) அவர்களே உலகின் முதல் மனிதர். அவரிடமிருந்தே பிற உயிர்கள் தோன்றியதால், அவரை முதல் மனிதர் என இஸ்லாம் சொல்கிறது.
பேரீச்சம்பழத்தில் இரும்புச் சத்து நிறைய உள்ளது. எல்லோருமே சாப்பிட முயற்சி செய்யுங்களேன்.
குறிப்பாக ரத்த சோகை உள்ளவர்களும் ரத்தம் உடலில் கம்மியாக இருப்பவர்களும் பேரீச்சையைத் தொடர்ந்து உண்டு வந்தால் பலன் நிச்சயம்.
No comments:
Post a Comment