Friday, January 06, 2006

உடல் பருமன் அதிகரிப்பதைக் குறைக்க...

உடலில் வாதத்தை நீக்கும், கொழுப்பு சேருவதைத் தடுக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

பார்லி நன்கு உகந்த உணவு வகையாகும். இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் சிறுநீர் அதிகமாக உற்பத்தியாவது தடுக்கப்பட்டு அதிக அளவு நீர் வெளியேறுவது தடுக்கப்படுகிறது.

கொள்ளு, உலர்ந்த பச்சிடி, பச்சைநிற காய்கறிகள் மற்றும் அனைத்து பழங்களிலும் அதிகளவு நார்ச்சத்து அடங்கியிருக்கிறது. இவற்றை எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். கொழுப்பு கரைந்து உடல் பருமன் குறையும்.

எருமைப் பாலைவிட, மாட்டுப் பால் குறைவான கொழுப்பு சக்தியினைப் பெற்றிருக்கிறது.

பீஸா உணவு வகைகள், பர்கர்ஸ், கூழ்மப்பொருள், கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவற்றைக் குடிக்கக் கூடாது.
மாவுப் பொருள்கள் அதிகம் கலந்த பொருள்கள் மற்றும் கொழுப்பு நீக்கப்படாத நெய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இனிப்பு பொருள்கள், வறுக்கப்பட்ட உணவுகள், ஸ்டார்ச் அதிகம் நிறைந்த உருளைக்கிழங்கு, அரிசி சாப்பாடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
காலையில் குறைந்தளவில் சர்க்கரை கலந்த தேனீர், காபி, ஒரு தம்ளர் பசும்பால் ஆகியவற்றுடன் காலை சிற்றுண்டியாக புதிதாக தயாரிக்கப்பட்ட பச்சிடியுடன் சேர்த்து ஒரு குறிப்பிட்டளவு பருப்புடன் அன்றைய உணவுனை உட்கொள்ள வேண்டும்.

கோதுமை மாவால் தயாரிக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்களை, ஜோவார் கொண்டு தயாரிக்கப்பட்ட ரொட்டி, பருப்பு, காய்கறிகள் மற்றும் பச்சடி ஆகிய உணவு வகைகளை உள்ளடக்கியதாக தினசரி உணவு இருக்க வேண்டும்.
காலை அல்லது மாலை நடுநிசி பொழுதில் பசி ஏற்பட்டால் பருப்பு, காய்கறி சூப்புகள், எலுமிச்சை, தேங்காய் நீர் அல்லது அடர்வுமிகு பாலாடை நீக்கிய நீர் ஆகியவற்றைக் குடிக்கலாம். இது அதிகப்படியான தாகத்தைக் கட்டுப்படுத்தும்.
இயற்கையில் 'புரோட்டோ ஸ்' கிடைக்கும் வகையில் அவ்வப்போது பருவகாலங்களில் வரும் தூய்மையான பழங்களை உட்கொள்ளலாம்.

உடற் பயிற்சிகள்:-
30 லிருந்து 45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வது அவசியம் இது உடலில் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவியாக இருக்கும்.
வேகமாக நடத்தல், நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல் அதிக ஆக்சிஜனை உள்ளுழுத்துவிட உதவும் உடற்பயிற்சி, யோகா, டென்னிஸ் விளையாடுதல் ஆகியவையும் உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
தாகம், இளைப்பு, மூச்சுவிடுவதில் கோளாறுகள், சக்தியை முழுவதுமாகச் செலவழித்தல் இருமல் ஆகியவற்றை அதிகம் வராமல் தடுக்க வேண்டும்.

No comments: