Friday, June 24, 2011

நார்மல் ஸ்கின்( Normal Skin ), ஆய்லி ஸ்கின்( Oil Skin )

நார்மல் ஸ்கின் கொண்டவர்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். சருமத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்ட ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், கிரீன் டீயில் கிடைக்கும். நார்மல் ஸ்கின் கொண்டவர்களின் சரும அழகுக்கு தேவையான எல்லா வைட்டமின்களும் தக்காளி, பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளிலும் மற்றும் பழங்களிலுமே பெரும்பாலும் கிடைத்துவிடும்.

ஆய்லி ஸ்கின் கொண்டவர்கள், ரத்தத்தை சுத்தப்படுத்தும் பீன்ஸ், கேரட், மாம்பழம் ஆகியவற்றைச் சாப்பிடலாம். பப்பாளிப் பழத்தை வாரத்துக்கு குறைந்தபட்சம் நான்கு நாள்கூட சாப்பிடலாம். ஆரஞ்சு, சாத்துக்குடி அல்லது எலுமிச்சம்பழ ஜூஸ் பயன் தரும். இவற்றில் இருக்கும் வைட்டமின் சி, சருமத்தில் இருக்கும் துவாரங்களை நெருக்கமாக்கும். தினம் இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். அதைவிட முக்கியம்... காபி, கேக் போன்ற அயிட்டங்களைத் தவிர்ப்பது!

டிரை ஸ்கின் கொண்டவர்களுக்கு வைட்டமின் இ மற்றும் சி அவசியம். இவர்கள் தினம் மூன்று பாதம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் சாப்பிடலாம். திராட்சைப் பழத்தை சாப்பிடுவதை வழக்கமாகவே ஆக்கிக் கொள்ளலாம். சோயா மற்றும் ஆலீவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டியது மிக அவசியம்.

காம்பினேஷன் ஸ்கின் கொண்டவர்கள், புரதச் சத்துக்கள் மிகுந்த பால் மற்றும் பயறு வகை தானியங்களுடன் சாத்துக்குடி, தர்பூசணி, கேரட், கீரை ஆகியவற்றைச் சாப்பிடலாம். தண்ணீர் நிறைய குடிப்பதும் அவசியம்.