தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும்இ புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும்இ ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் 'பி'யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் உள்ள புரோட்டீன்இ பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
பாலை உட்கொண்ட ஒருமணி நேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடுகிறது. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியவை உருவாக்குகிறது. இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும்இ தோல் பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியாஇ தோலை மிருதுவாகவும்இ பளபளப்பாகவும் மெருகு ஏற்ற அருமையான ஒரு மருந்தாகும். தயிர் தோலை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. பழச்சாறு அதற்குத் தேவையான வைட்டமின் 'சி'யை அளிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து. உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.
ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். தயிரை நாம் சரியாக உபயோகித்தால் நாளடைவில் எதிர்ப்புச் சக்தி குறைந்துஇ உடம்பில் பரவும் ஒரு விஷத்தன்மையால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைக் கூட தடுத்துவிட முடியும் என்று ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மஞ்சள் காமாலையால் சிலர் 'கோமா'வில் வீழ்ந்து விடும் ஆபத்து கூட இருக்கிறது. காரணம்இ அதிகமாக சுரக்கும் அமோனியா தான். இதைக் கூட தயிரின் உபயோகம் சரி செய்து விடும்.
மஞ்சள் காமலையின் போது தயிரிலோஇ மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும். சில சமயம் மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிரைக் கொண்டும்இ எலுமிச்சை சாறு கொண்டும் இதை எளிதில் குணப்படுத்தலாம். சொறி மற்றும் சில தோல் வியாதிகளுக்கு மோர் ஒரு சிறந்த நோய் தீர்க்கும் மருந்தாகும். தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் மோரில் நனைத்த துணி ஒன்றை வைத்து நன்றாக கட்ட வேண்டும். தொடர்ந்தோ அல்லது இரவில் மட்டுமோ இந்தக் கட்டுகளை போட்டுக் கொள்ளலாம். கட்டை அவிழ்த்தபிறகு தோலை நன்றாக கழுவிவிட வேண்டும்.
தோல் வீக்கத்திற்கு இது போன்ற கட்டுகள் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது. இந்தியாவில் உபயோகிக்கப்படும் பால் அளவில் 50 சதவீதம் தயிராக மாற்றப்படுகிறது. தயிரின் பல்வேறு உபயோகங்கள் நம் உணவுப் பழக்க வழக்கங்களில் அதை ஒரு தவிர்க்கப்பட முடியாத உணவுப் பொருளாகச் செய்துவிட்டது. தயிரை ஏதோ ஒரு வடிவத்தில் நாம் உபயோகிப்போம். இந்த 'அருமருந்தின்' அதிசய குணங்களால் நாம் ஆரோக்கியம் காப்போம்.
No comments:
Post a Comment