Saturday, February 20, 2016

சித்த மருத்துவம் - அழகு குறிப்புகள்


  • தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.



  • ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.



  • முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.



  • பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.



  • நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.



  • கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.



  • தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.



  • வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.



  • இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.



  • கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.



  • இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.



  • ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

  • முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.



  • மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.



  • பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

  • ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.



  • பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.



  • தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.



  • தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.



  • தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

Saturday, August 22, 2015

நரம்பு தளர்ச்சி நீங்க

கீழ்காண்பவற்றை உணவுடன் சேர்த்து உண்டுவர நரம்பு தளர்ச்சி நீங்கும்,
உலர் திராட்சை
பாதாம்
பேரிட்சை
செவ்வாழை
புதினா
எலக்காய்

Sunday, January 06, 2013

இரும்புச் சத்து

ஈரல், கோழி இறைச்சி, மீன், கீரை, மாதுளை, பேரீச்சம் பழம், கேழ்வரகு, வெல்லம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இரும்புச் சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கலாம். இதனுடன், வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இரும்புச் சத்தை கிரகிக்க அது உதவும்.

Sunday, July 29, 2012

பழங்களின் மருத்துவ குணங்கள்

ஆப்பிள் வயிற்றுப்போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரக கோளாறுகள், சிறுநீரகத்தில் கல், இதய நோய்கள் ஆகியவைகளுக்கு நல்லது. நாவல் பழம் நீரிழிவை நீக்கும். வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும். திராட்சை ஒரு வயது குழந்தையின் மலக்கட்டு, சளி ஆகியவற்றை நீக்கும். காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் கொடுத்து வந்தால் நீங்கும். கொய்யாப்பழத்தால் உடல் வளர்ச்சியும், எலும்புகளும் பலம் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படும். சிவப்பு திராட்சை, தோல் வியாதியை போக்கும். திராட்சை, ஆப்பிள், எலுமிச்சை - மலச்சிக்கலைப் போக்கும். பப்பாளி, ஆரஞ்சு - மூல வியாதிக்காரர்களுக்கு நல்ல பயன் தரும். திராட்சை, சாத்துக்குடி - ரத்த அழுத்தத்திற்கு நல்லது.

Monday, January 16, 2012

பாலின் தரம்


ஃபுட் சேஃப்டி அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் தரக் கொள்கையின்படி பாஸ்ட்ரைஸ்டு மற்றும் ஹோமோஜினியஸ்டு பால்தான் தரமான பால். அது என்ன பாஸ்ட்ரைஸ்டு பால்?  

பதப்பட்ட பாலின் ஒரு வகைதான் இது. சாதாரண பாலை 72.5 டிகிரி செல்சியஸுக்கு மேலே 16 நொடி களுக்கு சூடுபடுத்தி, பிறகு உடனடியாக 4 டிகிரி செல்சியஸில் குளிர்விக்கும் முறை இது. ஹோமோஜி னியஸ்டு பால் என்பது இன்னொரு வகை. பாலில் இருக்கும் கொழுப்பை முழுமையாக நீக்கிவிட்டு, 0.1 மைக்ரான் என்ற அளவுக்கு கொழுப்பு இருக்கிற மாதிரி  எளிதாக செரிமானம் ஆகக்கூடிய பால் இது.

லாக்டோஸ் இல்லாத பால், குழந்தைகளுக்கு ஏற்றது. வயதான பெரியவர்களுக்கும் இது ஏற்றது. டெட்ரா பேக் பால் என்பது ஒரு வகையான சிறப்பு பால். பாக்டீரியா இல்லாத, குறைவான லாக்டிக் அமிலம் கொண்ட பால். இம்முறையில் பதப்படுத்தப்பட்ட பாலை 180 நாள் வரை பாதுகாக்கலாம். இதன் விலை ரொம்பவே அதிகம்.


இவை தவிர, பாலில் இருக்கும் கொழுப்பு தன்மையை வைத்தும் பாலை வகைப்படுத்தலாம்.

புல் கிரீம் பால்: இதில் 6% கொழுப்பு இருக்கும். இது இளையவர்களுக்கு ஏற்றது.

ஸ்டாண்டரைஸ்டு பால்: இதில் 4.5% கொழுப்பு இருக்கும். இது அனைவருக்கும் எற்றது. ஆனால், வயதானவர்களுக்கு ஏற்றதல்ல.

டோன்டு பால் (Toned Milk): இது அனைவருக்கும் ஏற்றது. கொழுப்பின் அளவு 3%.

டபுள் டோன்டு பால் (Toned Milk): இது கொழுப்பை குறைக்க நினைப்பவர்களுக்கான பால் இது. இதில் 1.5 சதவிகித கொழுப்பு மட்டுமே இருக்கிறது.

ஸ்கிம்மிடு பால்: இதில் 0.5 சதவிகிதத்துக்கு குறைவான கொழுப்புதான். டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது. ஆனால், சுவையாக இருக்காது.

ஒப்பீட்டு முறையில் தென் இந்தியாவில் இருக்கும் பிராண்டட் பால் நிறுவனங்களை எடுத்து கான்சர்ட் நிறுவனம் சோதனை செய்து பார்த்ததில், இதற்காக எடுக்கப்பட்ட சர்வேயில் 25 சதவிகித மக்கள் ஸ்டாண்டரைஸ்டு பாலையும், 70 சதவிகித மக்கள் டோன்டு பாலையும், மீதமுள்ள 5 சதவிகித மக்கள் இதர வகையான பாலையும் பயன்படுத்துகிறார்கள். எனவே, ஸ்டாண்டரைஸ்டு பால், டோன்டு பால் என்ற இரண்டு வகையான பாலை மட்டுமே எடுத்துக்கொண்டு 'கான்சர்ட்’ அமைப்பு சோதனை செய்தது. லேபிள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், தரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சோதனை செய்தது கான்சர்ட்.

பிராண்டின் பெயர், முகவரி, உற்பத்தி இடம், பாலின் வகை, புகார்களை பதிவு செய்வதற்கான எண், உற்பத்தி தேதி, விலை, அளவு, சத்துக்களின் அளவு உள்ளிட்ட பல தகவல்கள் பாலின் லேபிளில் இருக்க வேண்டும்.

சில நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றினாலும், சில நிறுவனங்கள் மீறியிருக்கின்றன. உதாரணத்துக்கு சில பால் பாக்கெட்களில் உற்பத்தி செய்து இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்தவும் என்று அச்சிட்டி ருக்கிறார்கள். ஆனால், என்றைக்கு அந்த பால் பாக்கெட் தயாரானது என்கிற தேதியை போடவில்லை.

அதேபோல, சில பால்களில் ஃபிரெஷ் என்ற வாசகத்தை எழுதி இருக்கிறார்கள். நமக்கு கிடைக்கும் அனைத்துமே பதப்படுத்தப்பட்ட பால் என்னும்போது அதை ஃபிரெஷ் பால் என்று சொல்வது தவறு! சில பால்களில் கொழுப்பின் அளவு கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது குறைத்தோ சொல்லி தவறான வழிகாட்டிவிடுகிறார்கள்.