Tuesday, February 14, 2006

திராட்சை


திராட்சையில் பல வகைகள் உண்டு. சில பச்சை நிறமாகவும், சில கருப்பு நிறமாகவும் உள்ளன.

திராட்சையை உலர்த்திப் பக்குவப்படுத்தி விற்பனை செய்கிறார்கள்

திராட்சை எத்தனை வகையாக இருப்பினும் அதை பச்சையாகவோ அல்லது உலர்ந்த நிலையிலோ சாப்பிட்டாலும் அதற்கு நல்ல மருத்துவ இயல்பு அமைந்திருக்கிறது.

பல வகையான குடல் கோளாறுகளுக்கு பச்சைத் திராட்சை நல்ல வகையில் பயன்படுகிறது.

நரம்பு தளர்ச்சி காரணமாக ஏற்படுகிற உடல் நடுக்கத்தை சீர் செய்யும் வல்லமையும் இதற்கு உண்டு.

பச்சைத் திராட்சையின் சாறு எடுத்து பகல் உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வர நாக்குப் புண், வாய்ப்புண் ஆறும்.

கருப்புத் திராட்சையில் பச்சைத் திராட்சையை விடச் சில வகை சத்துக்கள் அதிகமாக உள்ளன.

உலர்ந்த திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட சுட வைத்த பசுவின் பாலில் இட்டு சிறிது நேரம் ஊறச் செய்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் இயல்பான சத்து சற்றுக் கூடுதலாகும்.

வளரும் குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுத்து வந்தால் அவற்றின் தசை வளர்ச்சி நல்ல முறையில் இருக்கும். மற்றும் அவற்றின் எலும்புகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

முதுமைப் பிராயத்தினர் உலர்ந்த திராட்சையைப் பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் அவர்கள் ஆரோக்கியம் காக்கப்படும்.

பேரிச்சம் பழம்

பேரிச்சம்பழத்தில் இரண்டு வகை உண்டு. பேரிச்சம் பழம், சிற்றீச்சம் பழம் என அவற்றைக் குறிப்பிடுகிறார்கள்.

பேரிச்சம் பழம் நமது மாநிலத்தில் அதிக அளவு கிடைப்பதில்லை. வட இந்தியாவில் பாலைவனப் பிரதேசங்களில் இது ஓரளவு கிடைக்கிறது.

சிற்றீச்சம்பழம் நமது தமிழகத்தில் மிகவும் தாரளமாக கிடைக்கிறது.

உடல் வளர்ச்சியில் இந்தப் பழம் சிறந்தது. குழந்தை களின் உடல் வளர்ச்சிக்கு இது ஏற்றது.

நீண்ட காலம் நோய் வாய்ப்பட்டிருந்து உடல் நலம் பெறாதவர்களின் உடல் தேறுவதற்கு பேரிச்சம் பழம் பேருதவி செய்யும்.

போரிச்சம் பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. இரத்தத்தின் செழுமையைக் கூட்டி அதிகரிக்க இது உதவும்.

எலுமிச்சம் பழம்


நோய் ஏற்பட்டால் தடுப்பதற்கு மட்டுமின்றி ஒரு மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கும் ஆற்றலும் எலுமிச்சம் பழத்துக்கு உண்டு. சித்த மருத்துவத்தில் தனியொரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள எலுமிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள் வருமாறு..

இரத்தம் தூய்மைக்கேடு அடைந்து விட்டால் அதை எலுமிச்சம் பழம் குணப்படுத்துகிறது.

மண்ணீரல் வீக்கம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் எலுமிச்சைச் சாறு கொண்டு எளிதில் குணப்படுத்தி விட முடியும்.

அன்றாடம் எலுமிச்சை சாற்றை ஒரு குறைந்த பட்ச அளவு எப்படியாவது உபயோகித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையே எழுவதில்லை.

பித்தப்பை தொடர்பாக ஏற்படும் பல பிணிகளை குறிப்பாக மஞ்சள் காமாலையை குணமாக்க எலுமிச்சம் சாறு சிறந்து விளங்குகிறது.

எலுமிச்சம் பழத்தின் சாற்றில் குறிப்பாக பொட்டா சியம், பாஸ்பரஸ், சிட்ரிக் ஆசிட் போன்ற பொருட்கள் கணிசமான அளவில் உள்ளன. இந்தப் பொருட்கள் அனைத்துமே நமது உடல் நலத்தை கட்டிக் காக்க உதவுபவையாக உள்ளன.

குறிப்பாக ஸ்கர்வி, வயிற்று வலி, அஜிரணம், மலச் சிக்கல் போன்ற கோளாறுகளை மிகக் குறைந்த காலத்தில் நிவர்த்தி செய்யும்

மனிதர்களுக்கு தேவையான வைட்டமின் சி சத்து எலுமிச்சையில் தாரளமான உள்ளது. இந்த சி-யை ஆஸ்கார்பிக் அமிலம் என்று சொல்வர். இது நீhpல் கரையும் தன்மை பெற்றது. ஆஸ்கார்பிக் அமிலம் உயிhpயல் ஆக்ஸி கரணங்களில் ஈடுபடுகிறது. இந்தச் சத்து நோய் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது.

உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்ட மளிக்கக் கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி நரம்புகளுக்கு புத்துணர்வையும், தெம்பையும் அளிக்கிறது.

இதிலுள்ள பொட்டாசியம் இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன், நரம்பு தளர்ச்சி அடையாமல் காக்கிறது.

Thursday, February 09, 2006

பப்பாளிப்பழம்


பழ வகைகள் எத்தனையோ இருந்தாலும் அவற்றுள் எல்லாம் சிறந்தது பப்பாளிப்பழம் தான் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். இது உடல் ஆரோக்கியத்தை மீட்டு புத்துயிர் அளிப்பதால் இத்தகைய சிறப்புப் பெற்றுள்ளது.

பொதுவாக மாம்பழத்தில் அதிக வைட்டமின்கள் உண்டு. இதற்கு அடுத்தபடியாக பப்பாளிப்பழத்தில் தான் அதிக வைட்டமின்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ- தான் அதிக அளவில் இருக்கிறது. எனவே தான் இதை நைட்ப்ளைண்ட்னஸ் எனப்படும் மாலைக்கண் நோய்க்கு அருமருந்தாகப் பயன்படுத்தலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

ஒரு அவுன்ஸ் பப்பாளி சுமார் 513 மில்லி கிராம் வைட்டமின் ஏ-வைக் கொண்டுள்ளது. அதே போல பி1, 11 மில்லி கிராமும், பி2, 2.72 மில்லி கிராமும், சி, 13 மில்லி கிராமும், இரும்புச்சத்து 0.1 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 0.3 மில்லிகிராமும் அடங்கி உள்ளன.

இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், வசதி படைத்தவர்களால் மட்டுமே பெரும்பாலும் உண்ணப்படும் ஆப்பிள் பழத்தை விட இதில் உயிர்ச்சத்துக்கள் அதிக அளவில் அடங்கி உள்ளன. பப்பாளி ரத்த உற்பத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதால் பெரும்பாலான நோய்கள் வரும் முன்னரே தடுக்கப்படுகின்றன.

மலச்சிக்கலைத் தடுக்கவும், பெண்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், பல் தொடர்பான நோய்களைப் போக்கவும் இது பயன்படுகிறது. நரம்பு மண்டலத்துக்கு உரமேற்றும் தன்மை இதற்கு உண்டு என்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

தக்காளி பழம்


நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம். தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது.

அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது. இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன. இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.

தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும். குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு. தக்காளியை சாப்பிடும் முன்பு சத்தம் செய்ய மறக்காதீர்கள். எனவே அன்றாடம் நமது உணவில் தக்காளியை மறக்காமல் சேர்த்து வந்து அதன் நன்மைகள் அனைத்தையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம்.